ஆக15 ,செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் பார்வையாளர்களாக வந்த பெற்றோர்களை சாரணமாணவர்கள் மிடுக்காக சீருடையில் வரவேற்பு மரியாதை செய்தார்கள் விழா கொடிப்பாடலுடன் துவங்கியது. தலைமை ஆசிரியர் முத்துகுமார் தலைமை தாங்கினார். அவர்கள் கொடி ஏற்றி தாயின் மணிக்கொடி பாடல் பாடினர் தேசிய கீதம் பாடி மரியாதை செய்தனர் சாரணர் கோள் அணிவகுப்பு செய்து கொடிக்கு மரியாதை செலுத்தினர் பின்னர் மாணவமாணவியர்களின் தேசப்பற்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் கருங்குளம் ஒன்றிய துணைத்தலைவர் லட்சுமணன் பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுவழங்கி ஊக்கப்படுத்தி கிராமத்து மாணவர்கள் திறமை நாடு முழுவதும் அறிய வெளிப்படுத்த வேண்டினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி குழந்தைகள் வாழ்வில் முன்னேற பாடுபடுகின்ற ஆசிரியர்களின் அளப்பரிய பணியினை பாராட்டி மகிழ்ந்தார். தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி வன்னியப்பன் படிப்பு ஒன்றே வாழ்க்கையில் பல படிகளை கடந்து உயர்வதற்கு உறுதுணையாவது கல்வியே என்றார். விளையாட்டில் சாதனை புரிந்த மாணவி பாராட்டப் பட்டார் அறிவியல் இராமசாமி நன்றி கூறினார்.


