செய்துங்கநல்லூர் நூலகத்தில்சுதந்திர தின விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணை தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஜீவா, பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சண்முகம், தோணி அப்துல் காதர், கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


