கோவில்பட்டியில் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் தேசிய கொடி வடிவில் பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.
நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லம்தோறும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடி வடிவில் அணிவகுத்து நின்று அசத்தினர். இதில் பள்ளி செயலாளர் கண்ணன், தலைமையாசிரியர் செல்வி, பள்ளிக்குழு உறுப்பினர்கள்ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, பொன் ராமலிங்கம், சமூக ஆர்வலர் முத்து முருகன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


