தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை அகஸ்தியர் தேரையர் போன்ற சித்தர்களும் பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் வழிபட்ட வரலாற்றுச் சிறப்புடையது.பாரதியாரின் குகையில் வாழும் கனலே என்ற பாடல் தோரணமலை முருகனைப் பற்றி பாடிய பாடல் ஆகும்
75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தோரணமலை முருகனுக்கு தேசியக்கொடி நிறத்தில் அலங்காரத்துடன் கையில் தேசிய கொடியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இன்று பகல் பகல் முழுவதும் 12 மணி நேரத்திற்கு தொடர் வழிபாடு தேவார திருவாசகம் மற்றும் முருகன் பக்தி பாடல்களை பாடி தொடர் பாமாலை வழிபாடு செய்யப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர். ராணுவத்தில் தேசத்திற்கு உயிர் நீத்து வீரமரணம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் நலனுக்காகவும் மற்றும் விவசாயிகள் வாழ்வு மேம்படவும்,தேச நலனுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மடத்தூர் இந்து துவக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளி தாளாளர் கதிர்வேல் முருகன் தலைமையில் பாரதியார் நேரு காமராஜர் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் வேடத்தில் பூஜையில் கலந்து கொண்டது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது
அடிவாரத்தில் பிள்ளையார்கோவில் அருகே தேசியக்கொடி பின்னணியில் முருகன் உற்சவர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
காலை மதியம் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே ஏ செண்பகராமன் செய்திருந்தார்


