
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் சுற்று சூழல் பாதிக்கா தொழில் முனைவுகளை முன்னுரிமை படுத்தி சுயஉதவிக்குழு / சுயஉதவி குழு குடும்பங்களை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவுகளை உருவாக்கிட ஏதுவாக மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராம வளர்ச்சி திட்டத்தை ஆழ்வார் திருநகரி வட்டாரத்திலுள்ள 30 ஊராட்சிகளிலும் 8 நாள் பணிகளை அந்த அந்த ஊராட்சிகளிலுள்ள 4 நபர்கள் மற்றும் 2 சமுதாய வல்லுநர்களின் பங்களிப்பில் கிராம அடிப்படை தகவல், இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு,மக்கள் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், இளைஞர்களுடனான கலந்துரையாடல், விவசாய உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை “வளம்” எனும் கணினி மென்பொருளில் பதிவேற்றம் செய்து ஒவ்வொரு ஊராட்சியிலும் சுற்றுச்சூழல் பாதிக்காத தொழில் முனைவுகளையும், தொழில் பயிற்ச்சிக்கான வாய்ப்புகளையும், உருவாக்க வாய்ப்புள்ள உற்பத்தியாளர்/தொழில் குழுக்கள் விவரங்களை தொகுத்து அவற்றை சீரிய முறையில் பயன்பாட்டில் கொண்டு வர தேவையான கிராம முதலீட்டு திட்டத்தை உருவாக்க்கி , இந்த 30 கிராம முதலீட்டு திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு “ஆழ்வார் திருநகரி வட்டார முதலீட்டு திட்டம்” மாக வரைவு செய்து , வட்டார அளவிலான ஒப்புதலுக்காக 11/08/2021 புதன் கிழமை அன்று ஆழ்வார் திருநகரி வட்டார அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட அணித்தலைவர் பாலமுருகன் வரவேற்புரையுடன் , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர்/ திட்ட மேலாளர் திரு.பிச்சை அவர்களின் சீரிய தலைமையுரையுடன் , வட்டார வளர்ச்சி ஆணையர் , வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) அவர்கள் முன்னிலையில், ஆழ்வார் திருநகரி ஒன்றியப் பெருந்தலைவர் திரு .ஜனகர் அவர்கள் சிறப்பு பங்கேற்பில் , விழா பேருரை மற்றும் வட்டார முதலீட்டு திட்ட விவரங்கள் குறித்து தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு. முத்தமிழ்செல்வன் அவர்களால் தெளிவாக காணொளி காட்சி வாயிலாக இளம் வல்லுநர் திரு, புஷ்பராஜ் அவர்கள் பங்கேற்புடன் விளக்கப்பட்டது. வேளாண்மை – உழவர் நலத்துறை வட்டார இணை இயக்குநர், வட்டார தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்,கால்நடை மருத்துவர் தென்திருப்பேரை மற்றும் வட்டார வங்கி மேலாளர்கள் மற்றும் வட்டார பிறதுறை அலுவலகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு “ஆழ்வார் திருநகரி வட்டார முதலீட்டு திட்டம் “குறித்த தங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் திருமதி வேல்கனி நன்றியுரை கூற “ஆழ்வார் திருநகரி வட்டார முதலீட்டு திட்டம்” ஒப்புதல் பெறப்பட்டு நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுப்பெற்றது