தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 17 பேர் கைது – 494 மதுபாட்டில்களும், ஒரு இருசக்கர வாகனமும் மற்றும் ரூபாய். 1,100/- பணமும் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (13.08.2021) குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் தலைமையில் தலைமை காவலர் திரு. ராஜ்குமார், திரு. இசக்கியப்பன் மற்றும் திரு. சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து சென்றபோது உடன்குடி வங்கி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ராமச்சந்திரன்(39) என்பவரை கைது செய்து 288 மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தது உட்பட, தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், ஆத்தூர், பசுவந்தனை, கயத்தார், கழுகுமலை, சூரங்குடி, புதூர், மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 12 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 494 மதுபாட்டில்களும், ஒரு இருசக்கர வாகனமும் ரூபாய். 1,100/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.