தூத்துக்குடியில் நடைபெறவுள்ள 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15.08.2021 அன்று, கொரோன தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறவுள்ள நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல முக்கிய அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறவர்களின் வாகனங்கள் நுழை வாயிலில் சோதனையிட்டு உள்ளே அனுப்பப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 94 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 18 நெடுஞ்சாலை காவல் ரோந்தும், 21 இருசக்கர வாகன ரோந்தும், இது தவிர உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் ரயில்வே ஸ்டேஷன், பேரூந்து நிலையம், விமான நிலையம் உட்பட 38 முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியியல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதிகளில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 110 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


