கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் கல்வி கண் திறந்த காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு 120 மாணவர்கள் காமராஜரின் வேடம் புனைந்து ஊர்வலமாக பள்ளி முன்பிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு காமராஜரின் ஓவியத்திற்கு 120 அகல் விளக்குகள் ஏற்றி மரியாதை செலுத்தினர்.பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சி பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியினை திறந்து வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ராஜேந்திர பிரசாத், நகர சபை துணைச் சேர்மன் ரமேஷ், பள்ளி குழு உறுப்பினர் ராம்குமார், வட்டார வள பயிற்றுநர் தனலட்சுமி, ஐ.சி.எம் பள்ளி உறுப்பினர் அமலி பிரகாஷ்,நாடார் நடுநிலைப்பள்ளி பொருளாளர் ஐயப்பன், உறுப்பினர்கள் மணிக்கொடி, ராமசாமி, ராஜா அமரேந்திரன், பொன் ராமலிங்கம், பள்ளி ஆசிரியர்கள் மீனா, கணேசன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.


