பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய நாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்ம விருதுகள் 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ளது. இவ்விருதுகள் பலதுறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள், அதாவது கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதில் விளையாட்டுத் துறையில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள் அவர்களது விண்ணப்பத்தினை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், பதிவேற்றம் செய்ய கடைசிநாள் 15.09.2022 ஆகும். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


