திருவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுரு சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் திரு.ம.முத்து சிவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
வரலாற்று ஆசிரியைகள் திருமதி சித்ரா திருமதி லட்சுமி ஆகியோர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடற்கல்வி ஆசிரியர் திரு முருகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.


