இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நகர எரிவாய் விநியோகத் திட்டத்தின் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூய்மை இந்தியா இரு வார கால அனுசரிப்பை முன்னிட்டு ஜூலை 1ம் தேதி முதல் 15ம்தேதி வரை சுற்றுச்சூழல், சுகாதார சம்பந்தமான பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டி, விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மையாவாடி அருகே உள்ள தூத்துக்குடி மாநகராட்சி சொந்தமான சலவைத் துறை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி வரவேற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் இ. ஆ.ப. தலைமை தாங்கினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நகர எரிவாயு விநியோக திட்டத்தின் முதன்மை மேலாளர் என் ரஞ்சித் குமார் உதவி மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி பூங்காவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நகர எரிவாயு விநியோக திட்டம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் 520 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் மூலம் தண்ணீர் ஊற்றி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின், கவுன்சிலர்கள் கனகராஜ், கந்தசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் சிறப்பாக செய்திருந்தனர்.
தாமிரபரணி வாசகர் வட்டம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாள் விழா மற்றும் அன்புச் சகோதரர் நெருப்பு விழிகள் திரு சக்தி வேலாயுதம் அவர்கள் எழுதிய செம்புலப் பெயல் நீர் என்ற கவிதை தொகுப்பு நூல் திறனாய்வு ஆகிய இருவரும் நிகழ்வுகள் நடைபெற்றது. சிறப்பான இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிடும் பொன்னான வாய்ப்பினை பெற்றிருந்தேன்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய மரியாதைக்குரிய எழுத்தாளர் தமிழ்ச்செமமல் திரு முத்தாலங்குறிச்சி காமராசு ஐயா அவர்களின் திருக்கரங்களால் நினைவு பரிசு பெற்ற இனிய தருணம்…