தாமிரபரணி வாசகர் வட்டம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் ர் நெருப்பு விழிகள் சக்தி வேலாயுதம் எழுதிய செம்புலப் பெயல் நீர் என்ற கவிதை தொகுப்பு நூல் திறனாய்வு ஆகிய இருவரும் நிகழ்வுகள் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் தமிழ்ச்செமமல் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டு காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
கலை பதிப்பகத்தின் பதிபாசிரியர் பாப்பாக்குடி இரா செல்வமணி தலைமை வகித்தார் . வாசிப்பு இயக்க தலைவர் லயன் சு தம்பான் , மேனாள் உதவி ஆட்சியர் தியாகராஜன் , கவிஞர் கோதை மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முனைவர் சரவணகுமார் தொகுத்து வழங்கினார் . , கவிஞர் சுப்பையா , திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அவர்களின் நேர்முக உதவியாளர் மாணிக்கவாசகம் , கவிஞர் தளவாய் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் , உதவி பேராசிரியை பிரியதர்ஷினி உள்பட பலர் கொண்டனர்.
மீனாட்சிபுரம் கிளை நூலகத்தின் நூலகர் அகிலன் முத்துக்குமார் வரவேற்றார் .கவிஞர் செ.சா. பிரபு நன்றி கூறிnர்