நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவையாற்றி வருவதாக லயன் பஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகளை லயன்ஸ் பஸ் என்ற தனியார் பஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, அரசு பஸ்களை நிறுத்தும் செய்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக லயன் பஸ் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து சேவையை லயன்ஸ் பஸ் நிறுவனம் வழங்கி வருகிறோம். தடம் எண் 578 நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனை பேருந்து ஆகும். இப்பேருந்து ஆரம்பம் முதல் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.30மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி வழியாக ஸ்ரீவைகுண்டம் வந்து 8.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி சென்று 10.10 மணிக்கு மீண்டும் அதே வழிதடத்தில் நாகர்கோவில் சென்று வந்தது
ஆனால் காலை 7.55 மணிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பேருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் லயன் பேருந்துக்கு பின்னால் 8.25 மணியாக மாற்றப்பட்டுள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும். தமிழக அரசு,போக்குவரத்து கழகம்,போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் லயன் பஸ் நிர்வாகம் ஆகியவர்களின் மீது வீண் களங்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


