செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவன்கோயில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோயில். இந்த கோயிலில் சனி பிரதோஷம் நடைபெற்றது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிவன், சிவகாமி அம்மாள், நந்தி உள்பட தெய்வங்களுக்கு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. மாலையில் சனி பிரதோஷத்தினையட்டி சிவன் ,சக்தி, நந்திக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடந்தது. அதன் பின் சிவன் சப்பரத்தில் உள் வீதியில் உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குருமாரியப்பன், பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிக பேரரவையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துராமன் செய்திருந்தார். சனி பிரதோசத்தில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


