தாமிரபரணியை காக்க ஆலோசனை கூட்டம் நெல்லை பெருமாள் புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து நடந்தது. சமூக சேவகர் விதுபாலா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அனுமன் நதி, பழையாறு, சிற்றாறு, போன்ற நதிகள் தூய்மை படுத்த பணி செய்த சக்தி நாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அவர் விட்டு சென்ற பணியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. முதற்கட்டமாக நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியை சர்வே செய்வது, நதியில் கலக்கும் சாக்கடைகளை நிறுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர் கருவை செடிகளை அகற்றி மரம் நடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் கிருஷ்ணகுமார், சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், நம்தாமிரபரணி கல்யாணசுந்தரம், சிகாமணி, ரவிவெங்கடேஷ், விவேக், சவரி வாசன், ஆழ்வாரப்பன், ராஜேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


