திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளிடத்தில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டயல் அவுட் கான்பெரென்ஸ் முறையில் திருவேங்கடம் வட்டாரத்தில் உள்ள ஓடைகரைப்பட்டி, மேல நாலந்துலா மற்றும் சிதம்பராபுரம் கிராமங்களை சார்ந்த 40 விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் அருண்ராஜ் மண் பரிசோதனையின் அவசியம், மண் பரிசோதனையின் நன்மைகள், மண் மாதிரி எடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


