தூத்துக்குடியில் தாலுகா அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றறார். அப்போது டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறினார். தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை முடித்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். ஆய்வின் போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.