மணக்கரை மருதூர் கீழக்கால் பகுதியில் சேதம் அடைந்துள்ள பாலத்தைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை மருதூர் கீழக்கால் பகுதியில் சேதம் அடைந்துள்ள பாலத்தைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் நேற்றைய தினம் என்னை சந்தித்து மருதூர் கீழக்கால் பகுதியில் உள்ள பாலம் சேதம் அடைந்து நடந்து போகமுடியாத அளவிற்குப் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே தொடர்ந்து அந்த பாலத்தினை சரி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு இந்த பாலத்தினை மிக விரைவில் சரி செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட அறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு பெற்று விரைந்து இந்த பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்தார்கள். ஆய்வின் பொழுது தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை, தூத்துக்குடி கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கோமதிராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.