அரியநாயகிபுரத்தில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் கிராமத்தில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அரியநாயகிபுரத்தில் உள்ள பொதிகை அக்ரோ தோட்டத்தில் பாழடைந்த வீடு தனியாக இருக்கிறது. இந்த வீட்டில் சுமார் 350 மூட்டை ரேஷன் அரிசி இருந்ததை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த அரிசி சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது.
இதனையடுத்து 350 மூட்டை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்த போலிசார் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


