தூத்துக்குடியில் ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் மரம் நடுவிழாவை மேயர் என்.பி ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஆல்கேன் டிரஸ்ட் 7வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முத்தம்மாள் காலனி அருகே ரஹமத் நகரில் மரக்கன்றுகள் நடும் விழா, தலைவர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் என்.பி ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார்.
இந்நிகழ்ச்சியில் 20 வட்டச் செயலாளர் ரவீந்திரன் ஆல்கேன் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருதபெருமாள், ஜெயராஜ், மகேஸ்வர சிங், ஐயப்பன் இம்மானுவேல், ஆசீர், கேசவன், முத்துராமன், பிரசன்னா, செந்தில் நாராயணன், அருள், வேல், பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


