சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் 75 பேர் பயனடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 10 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்து முடித்த பட்டதாரிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோரிடம் நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 75 பேருக்கு பணி ஆனை வழங்கப்பட்டது. இவர்களுக்கு முதல் மூன்று மாதங்கள் பயிற்ச்சி அளிக்கப்பட்டு பின்னர் நிரந்தர பணியமர்த்தப்படுவார்கள் என தனியார் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பணி கிடைத்த அனைவரும் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.


