சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2021 அ‹றைய தினம் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-Ï‹ படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.


