கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் கருங்குளம் அருகேயுள்ள இரானுஜம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர் டாக்டர்.ஐஸ்வர்யா தலைமை தாங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர். டாக்டர்.மு.சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமார வெங்கடேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
சுகாதார ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இம் முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்றா நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கருங்குளம் மருத்துவ அலுவலர் டாக்டர்.ரமிஷ் ராஜா அவர்கள் நன்றி கூறினார்.
இந்த முகாமில் டாக்டர்.கிருஷ்ணஜோதி, சித்த மருத்துவர்.ரதி செல்வம், பல் மருத்துவர் ஜெயவானி,
இராமானுஜம்புதூர் ஊராட்சி மன்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணபதி,
பிசியோதெரபிஸ்ட் செந்தில் முருகன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா,
மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள் பிரசாத், அக்சிலின், சர்பின்,
கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர், ஆய்வகநுட்பனர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின்
சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன்,
கிராம வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஏற்பாடுகளை
இரானுஜம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீரெங்கன்
மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர் ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


