காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.62½ கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ பிரிவுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம்காயல்பட்டினத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ரூ.62½ கோடி மதிப்பில் ஏழு மாடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சிறப்பு மருத்துவ பிரிவு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை அதிகாரி விக்னேஸ்வரன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தம்பிரான் தோழன், காயல்பட்டினம் மருத்துவமனை அதிகாரி கோகிலா, நகரசபை தலைவர் கே. ஏ.எஸ் முத்து முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காயல்பட்டினம் ஆறாம் பள்ளி தெரு, நெசவு தெரு கூலக்கடை பஜார், மெயின் ரோடு, ஆகிய நான்கு இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 63 கே.வி.கே. மின் மாற்றிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து காயல்பட்டினத்தில் 113 சாலைப் பணிகளுக்கும், வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. காயல்பட்டினத்தில் 2ஆயிரத்து 350 எல்.இ.டி. விளக்குகள் இயக்கி வைக்கப்பட்டதுடன், நகராட்சிக்கு 15 புதிய பேட்டரி ஆட்டோக்கள், 3 மினிவேன்களை எம்.பி. வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ரோமோனா, திருச்செந்தூர் கோட்ட பொறியாளர் விஜய சங்கர பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் கலைக்கண்ணன், ஆறுமுகநேரி உதவி பொறியாளர் ஜெபஸ் சாம், நகர சபை துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, கவுன்சிலர்கள் மாரீஸ்வரி, முருகன், கதிரவன் தஸ்நேவிஸ்ராணி, ரசிதா பிவி, அஜ்வாது, ரோஷியா பானு, மெய்தீன், ந.பூங்கொடி, ரங்கநாதன், செய்யது ஆசியா, முத்து ஜெய்னம்பு முகமது சையது பாத்திமா, அபூபக்கர் சித்தீக், ராமஜெயம், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையாளர் குமார் சிங் நன்றி கூறினார்.
தொடர்ந்து ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து பகுதியான மடத்துவிளை பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடைக்கு ரூ.13½ லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜாமணிபுரம் பகுதியில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.


