அனவரதநல்லூர் அருகே தண்ணீர் கேன் ஏற்றி வந்த ஆட்டோ மோதி பைக்கில் வந்த தந்தை மகன் படுகாயம்.
திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளைசாமி மகன் பேச்சிராஜா. 38 வயதானவர் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் அபிஷேக். இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்து இருந்து அவரது உறவினர் வீடான செய்துங்கநல்லூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அனவரதநல்லூர் அருகே உள்ள அம்பேத்கர்நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த தண்ணீர் கேன் ஏற்றி வந்த ஆட்டோ, இவர்கள் வந்த பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த முறப்பநாடு போலீசார் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் கேன் ஏற்றி வந்த ஆட்டோ டிரைவரான பாளையங்கோட்டை பெரியார்நகர் தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் ராஜசேகர் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


