Close-up of young African woman wearing head-wrap and lying in hospital bed with oxygen mask and eyes closed.
பிரேத பரிசோதனை செய்ய மறுத்த மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உறவினர்கள் சாலை மறியல்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளத்தை சேர்ந்த கணேசன் என்பவரது இரண்டு வயது மகள் சுகித்ரா உடல்நலம் இன்றி இன்று காலை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர். சுகித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் போது பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்து முடித்து சிறுமி சுகிர்தாவின் உடலை ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என வலியுறுத்தி இசவன்குளத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், மற்றும் டிஎஸ்பி மாயவன் உள்ளிட்டோர் பொது மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என பெற்றோர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சிறுமியின் உடலை ஒப்படைப்பதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலை பொழுது மக்கள் கைவிட்டதால் போக்குவரத்து தொடங்கியது.
சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


