நாசரேத் தூய யோவான் பேராலய அசன பண்டிகையில் நாசரேத் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், கனோன் ஆர்தர் மர்காஷியஸ் சபை மன்றம், நாசரேத் சேகரம், நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் 95ஆவது பிரதிஷ்டை அசனப் பண்டிகை கடந்த 8ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் ஆண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில் பாளையங் கோட்டை ஆஸ்க்வித் பாா்வைத் திறன் நலிவுற்றோா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் இன்னிசை நிகழ்ச்சி, 2ஆம் நாள் நாசரேத் சபையின் வி.பி.எஸ் இறுதி நாள் நிகழ்வு, 3ஆம் நாள் நாசரேத் சொா்க்கவாசல் ஜெபக்குழு வழங்கிய ஒலி-ஒளி நாடகம், 4ஆம் நாள் பாடகா் குழு நிகழ்ச்சி, 5ஆம் நாள் நாசரேத் குடும்ப உபவாச கூடுகை நடைபெற்றது.
இதில், சென்னை அள்ளித் தூவும் விதைகள் சுவிசேஷகா் ரூபன் திலகராஜ் சிறப்புச் செய்தி அளித்தாா். பின்னா், பேராலய வாலிபா் ஐக்கிய சங்கம் சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் பிரதிஷ்டை பண்டிகை விழிப்பாராதனை, பாடகா் குழு சிறப்புப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதுரை-முகவை திருமண்டல குருத்துவ செயலா் சாமுவேல் ஆா்.வி. சிங் சிறப்புச் செய்தி அளித்தாா். ஆராதனைக்குப் பின்னா், வாணவேடிக்கை, ஐக்கிய விருந்து நடைபெற்றது.
நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை பிரதிஷ்டை அசன பண்டிகை, திருவிருந்து ஆராதனை, மாலையில் அசன வைபவம் நடை பெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேராலய திருப்பணிவிடையாளா்கள் பொன்செல்வின் அசோக்குமாா், மா்காஷிஸ் டேவிட்வெஸ்லி, சபை ஊழியா்கள் ஜாண்சன், ஜெபராஜ், அசன கமிட்டி நிா்வாகிகள், சபை மக்கள் செய்திருந்தனா்.


