தெய்வச்செயல்புரத்தில் தமிழக போக்குவரத்து துறை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெய்வ செயல்பாடு பஜாரில் தமிழக போக்குவரத்து துறையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி தூத்துக்குடி இரு மார்க்கத்திலும் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வசவப்பபுரம், பக்கப்பட்டி, முறப்பநாடு, வல்லநாடு, தெய்வச்செயல்புரம் பகுதிகளில் நின்று செல்ல வலியுறுத்தி தமிழக போக்குவரத்துத் துறையை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேஷ், சென்னை கேசவன், பட்டியலணி மாநில பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட பொருளாளர் கணேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், ஹேமா மாலினி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன், தூத்துக்குடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜா விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செல்வின் சாவான், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் மங்கள ரோஸ் மற்றும் கருங்குளம் ஒன்றியத்தைச் சார்ந்த பொதுச்செயலாளர்கள் துணைத் தலைவர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


