தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் அஸாருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அன்சர் கான் மற்றும் மாநில தனிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் சிறப்புரையாற்றினர்.மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் மூடப்பழக்கவழக்கங்கள் புதுமையான அனாச்சாரங்களை ஒழித்துக்கட்டி மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் பித்அத் ஒழிப்பு மாநாடு பிப்ரவரி மாதம் 2023 ல் நடத்துவது, ஏரல் பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் அமைப்பது போன்ற தீர்மானங்களை ஏரல் கிளை தலைவர் சதாம் வாசித்தார்.கிளை செயலாளர் மன்சூர் நன்றி கூறினார்.கிளை பொருளாளர் அப்துல் ஹமீத் மற்றும் ஏனைய நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.


