செய்துங்கநல்லூர் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் பறக்கும் தூசி, தேங்கும் சாக்கடையால் பொதுமக்கள் பாதிப்பு செய்துங்கநல்லூரில் கடந்த 6 மாத காலமாக ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை வேலையால் பறக்கும் தூசி, தேங்கும் சாக்கடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருச்செந்தூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை தொழில்வழிச்சாலைப்பணிகள் கடந்த வருடம் ஜுலை மாதம் துவங்கப்பட்டது.
சுமார் 635 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வி.எம்.சத்திரத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை மிக விரைவாக நடந்தது. அதன் பின் செய்துங்கநல்லூர் ஊருக்குள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. செய்துங்கநல்லூரை பொறுத்தவரை நகரை அழகு படுத்தி இருபுறமும் சாக்கடை வறுகால் அமைத்து இரண்டு பஸ் நிறுத்தம், இலவச கழிவறை, கண்காணிப்பு கமரா என நவீன வசதியில் பணிகள் நிறைவேற உள்ளது. எனவே இந்த பணி துவங்கிய உடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.இருபுறமும் சாக்கடை வறுகால் அமைத்த பிறகு மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது . இதனால் ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்பட்டது. செய்துங்கநல்லூர் மக்கள் அதிகமாக கூடும் சந்தை அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதி தோண்டப்பட்ட பாலம் வேலை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் சி.எஸ்.ஐ கோயிலில் இருந்து வரும் சாக்கடை வெளியே செல்ல முடியாமல் அங்குள்ள சி.எஸ்.ஐகிறிஸ்தவ ஆலயம் முன்பு தேங்கி கிடக்கிறது.
மேலும் இங்குள்ள துவக்கப்பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் கடினாமாக கடந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது. எனவே இந்தபகுதியில் உள்ளவர்களுக்கும், சந்தைக்கு வந்து செல்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவல நிலைஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், மக்கள் அதிகமாக கூடும் செய்துங்கநல்லூர் பெந்தகோஸ்தே ஆலயம் அருகிலும் செய்துங்கநல்லூர் சந்தை அருகே«யும் உள்ள சாலையை பெயர்த்து விட்டனர். ஆனால் புதிதாக சாலை போட எந்த முயற்சியில் ஏற்படுத்த வில்லை. எனவே வாகனங்கள் செல்லும் போது தூசி பறந்து, இருசக்கரவாகனத்தில் வருபவர்களை விபத்துக்குள் ஆக்குகிறது. வியாபாரிகள் நிலை அதை விட பரிதாப மாக உள்ளது. வியாபர ஸ்தலங்கள் எல்லாம் சாலையில் இருந்து வரும் தூசியால் பாதிக்கப்படுகிறார்கள். சாலையில் இருந்து கிளம்பும் புழுதியால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே செய்துங்கநல்லூர் நகரத்தில் உள்ள பணிகளை மிக விரைவாக முடிகக வேண்டும். பணியாள்கள் திருச்செந்தூரில் இருந்து பல்வேறு இடங்களில் பிரிந்து வேலை செய்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் செய்துங்கநல்லூர் நகர பணியை சீரமைத்து விட்ட மற்ற வேலைகளை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


