தூத்துக்குடியில் ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப், தமிழன்டா கலைக்குழு இயக்கம் மற்றும் அரவித் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம் காமராஜ் கல்லூரி நடைபெற்றது. முகாமினை ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் பாலு துவக்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3212 மண்டலம் 23 துணை ஆளுநர் ராஜேஷ் மொராய்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப் தலைவர் பொன்னுச்சாமி, பொருளாளர் மாரியப்பராஜ், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் கவிமணி, வழக்கறிஞர் மகேஷ், அருணாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. தேவைப்பட்டோருக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.
முன்னதாக தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் பல்வேறு கலை நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை கோலப்போட்டி, பழைய சாதம் சாப்பிடுதல் போன்ற தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்


