ஸ்ரீவைகுண்டம் அருகே தொடர் மழையால் ஊருக்குள் புகுந்த மழை நீர். கரை உடைந்து ஊருக்குள் புகுந்ததால் 25க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தில் குளத்தின் மறுகால் பாய்ந்து வாய்க்கால் வழியாக மழை நீர் வெளியேறி வருகிறது. இதில் வாய்க்காலின் ஒருபுற கரை உடைந்து கிளாக்குளம் ஊருக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் சுமார் 25க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
அதே போல் கிளாக்குளம் குளத்திற்கு காட்டாற்று தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிளாக்குளம் தெற்கு காரசேரி பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
அதன் அருகே கடந்த வருடம் வெள்ளத்தில் சேதமடைந்த கரை சீரமைக்கப்பட்டது. அனால் இந்த மழை வெள்ளத்தில் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சேதமடைந்த கரை பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


