வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று இரவு மழை குறைந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் நீராடி வந்தனர்.
தொடர் மழை காரணமாகவும், ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடலில் ஆழமான பகுதிகளுக்குச் சென்று பக்தர்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக கடலில் நீராடும் பக்தர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பக்தர்கள் நீராடி வருகின்றனர்.


