திருச்செந்தூருக்கு சுற்றுலா வந்த பெங்களூர் பகுதி அரசு பள்ளி மாணவ மாணவிகள். கடலின் சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் கரையோரம் நின்று கடலை ரசித்துச் சென்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடலில் பாதுகாப்பாக நீராட பக்தர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த 130 அரசு பள்ளி மாணவ மாணவிகள் திருச்செந்தூருக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களை கோவில் முன்புள்ள கடலில் இறங்கி விளையாட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களிடம் கடலில் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கரையோரம் நின்று கடலை ரசித்து செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து மாணவ மாணவிகள் கடற் கரையோரம் நடந்து சென்று கடலை ரசித்து அங்கிருந்து கிளம்பினார்.


