புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.305 இலட்சம் மானியம் ஒதுக்கீடு என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி, எழிலார்ந்த தொழில்கள் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்கிட ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (Nநுநுனுளு) 2012-13-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் தொடங்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பரிந்துரைக்கப்படுகிறது. கல்வித் தகுதியாக +2 அல்லது ஐவுஐ தேர்ச்சி, பட்டப்படிப்பு/பட்டயபடிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 21-க்கு மேல் 45 வரையும், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் ஆகியோருக்கு வயது 21-க்கு மேல் 55 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவிகிதமும்;, சிறப்பு பிரிவினர் 5 சதவிகிதமும் தங்கள் பங்காக வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இத்திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அரசு மானியமாக (அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை) வழங்கப்படும். தவணை தவறாமல் கடன் திரும்ப செலுத்தும் தொழில்முனைவோருக்கு 3மூ பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். தொழிற்கூடத்திற்கு தேவையான கட்டிடங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் அரிசிஆலை, மர இழைப்பகம், எண்ணெய் உற்பத்தி, லேத் இயந்திரம் அமைத்தல், அட்டைப்பெட்டி தயாரித்தல், உப்பு அரைத்தல், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், பேவர் பிளாக், ஆயத்த ஆடைகள் தயார் செய்தல், ஸ்டீல் மர கட்டில், அலமாரி, கதவு, சன்னல் தயார் செய்தல்,
செறிவூட்டப்பட்ட கார்பன் தயார் செய்தல், தேங்காய் பவுடர் தயார் செய்தல், மீன் எண்ணெய், மீன் வலை தயார் செய்தல், முந்திரி பருப்பு பதப்படுத்துதல், பழக்கூழ் தயார் செய்தல், தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்தெடுத்தல், தென்னை நார் கட்டிகள் தயார் செய்தல், இரும்பு, அலுமினியத்தை பயன்படுத்தி கதவு, சன்னல் தயார் செய்தல், போன்ற உற்பத்தி தொழில்கள் துவங்க வாய்ப்புள்ளது.
உணவகம், புகைப்பட நிலையங்கள், கலவை இயந்திரம் வாங்கி வாடகைக்கு விடுதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாடகைக்கு விடுதல், கட்டுமானப் பொருட்கள் வாடகைக்கு விடுதல், விவசாயம் சார்ந்த கருவிகள் வாடகைக்கு விடுதல், அழகு நிலையம் அமைத்தல், உடற்பயிற்சி கூடம், நான்கு/இரு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கம் செய்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிசியோதெரபி கிளினிக் போன்ற சேவைத் தொழில்கள் துவங்க வாய்ப்புள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற்று நீங்களும் தொழில் முனைவோராக மாறி பிறருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரும்பணி ஆற்றிட தமிழக அரசு அழைக்கிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கல்விச்சான்று நகல், ஜாதிசான்று நகல், புகைப்படம், குடும்ப அட்டை, விலைப்புள்ளி, கட்டிடம் தேவைப்படின் அதற்கான மதிப்பீடு, தொழில் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் நேரடியாக 17.12.2024 (செவ்வாய்கிழமை)அன்று மாவட்ட தொழில் மையத்தில் வைத்து நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கடன் பெற ஆலோசனைகளும், விண்ணப்பம் இலவசமாக பதிவேற்றமும் செய்து கொடுக்கப்படும். புதியதாக தொழில் தொடங்க விரும்புவோர் தமிழக அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம்.
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி (தொலைபேசி எண் : 0461-2340152) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.


