தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் திருக்கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா டிச.20 ஆம் தேதி நடைபெறுகிறது.
அருள்மிகு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு புதன்கிழமை பெயா்ச்சியாக உள்ளாா். இதனை முன்னிட்டு தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் திருக்கோயிலில், சனீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை டிச.20 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 4 மணிக்கு கும்ப பூஜை, மாலை 4.30 மணிக்கு நவக்கிரக அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. திருக்கோயில் நிா்வாக அறங்கவலா் குழுவினா் இத் தகவலைத் தெரிவித்துள்ளனா்.


