மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளரம், வினைதீர்த்த விநாயகர் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் திறந்து வைத்தார்.
குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்திபூஜையுடன் மன்ற தலைவர் சங்கரேஸ்வரி முன்னிலையில் வேள்விக்குழு தலைவர் கிருஷ்ணலீலா துவங்கி வைத்தார். 108, 1008 மந்திரங்கள் படித்து பெண்கள் வழிபட்டனர். விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு ஆடை தானமாக வேஷ்டி, சேலைகளை வட்டத் தலைவர் வண்டிமலையான் வழங்கினார். பிரச்சாரக்குழு இணைச் செயலர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட இளைஞர் அணி செல்லதுரை, வேள்விக்குழு பொறுப்பாளர்கள் சுந்தர், கனகா, சாந்தி, மன்ற பொறுப்பாளர்கள் சீதா, திருவிக நகர் சக்திபீட மகளிர் அணி பிரமீளா, பத்மாவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


