செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11 ந்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருங்குளம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்று விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முதல் நாள் மண்டகபடி செய்துங்கநல்லூர் மு. பட்டன் குடும்பத்தினர் சார்பிலும் இரண்டாவது நாள் மண்டகபடி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சார்பிலும் நடந்தது.
மூன்றாவது நாள் யோகீஸ்வரர் சமுதாயம் சார்பில் மண்டப படி நடந்தது. மூன்றாம் நாள் யாகசாலை பூஜைகள், மூலவர் மற்றும் நடராஜர் பஞ்ச மூர்த்தி அபிசேகம் தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனை சுவாமி திருக்கோவில் உள்பிரகார வீதி உலா எழுந்தருளல் தீபாராதனை நடைபெற்றது.
திருவிழா நடைபெறும் 10 தினங்களும் காலையும் மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா எழுந்தளும் நிகழ்ச்சியும், திரு நடன தீபாராதனையும் நடைபெறுகிறது. கோயில் பூஜைகளை வெங்கடாசலம் வாத்தியார், முத்துராமன் உள்பட குழுவினர் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.
&&&&


