குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தசரா பாதயாத்திரைக் குழுவினர் சார்பில் காளி வேடமணிந்த பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவில், புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு குருசாமி பரதன் முத்து தலைமையில் தசரா பாதயாத்திரைக் குழுவினர் அமைத்துள்ள சிறப்பு அரங்கில் நாள்தோறும் முத்தாரம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளை முன்னிட்டு முத்தாரம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் காளி வேடமணிந்து அருள் வந்து ஆடியபடி காளி ஊர்வலம் நடைபெற்றது. இவ்வூர்வலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலை மற்றும் முத்தையாபுரம் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாகப் பவனி வந்து, மீண்டும் கோயில் செட்டை வந்தடைந்தது.

இந்நிகழ்ச்சியில் முத்தாரம்மன் ட்ரான்ஸ்போர்ட் பாலமுருகன், இந்து முன்னணி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராகவேந்திரா, சிவலிங்கம், ‘வீ தி லீடர்ஸ்’ மாதவன், இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆறுமுகம், தேசியத் தலைவர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை இளைஞரணி திருமந்திர நகர் மாவட்டத் தலைவர் பாலாபிள்ளை, அலங்காரம் மற்றும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.