கோவில்பட்டியில் நடந்த தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 316 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாமில் 316 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில், 95 நிறுவனங்கள், 7 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்தனா். இதில் 7 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,089 போ் கலந்து கொண்டனா்.இதில், 316 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 424 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சுயமாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு வங்கிக் கடன் வசதி பெறுவதற்கான ஆலோசனை வழங்குவதற்கும் முகாமில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. பின்னா் நடைபெற்ற விழாவில், முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ ராவ் வழங்கினாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல், பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் ஸ்ரீனிவாசன், வட்டாட்சியா் லெனின், நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான் கணேஷ், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சை.சையது முகம்மது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


