செய்துங்கநல்லூர் 1வது வார்டு உறுப்பினர் பதவியேற்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப கடந்த மாதம் இடைத்தேர்தல் தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து செய்துங்கநல்லூர் 1வது வார்டுக்கு பொது அறிவிப்பு விடப்பட்டு உறுப்பினருக்கான தேர்வும் கடந்த மாதம் நடந்தது. இதில் செய்துங்கநல்லூரை சேர்ந்த முஹம்மது நவாஸ் 1 வது வார்டு உறுப்பினராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதற்கான படிவம் 26 யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக இன்று வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் பதவிஏற்பு விழா நடந்தது.
இதில் ஊர்மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் தலைவர் பார்வதிநாதன் மற்றும் துணைத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 1வது வார்டு உறுப்பினர் நவாஸ் உறுதிமொழி ஏற்று தனக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.


