தூத்துக்குடியில் தக்ஷிண பாரத் ஹிந்தி ப்ராச்சார் சபாவின் ஹிந்தி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
தக்ஷிண பாரத் ஹிந்தி ப்ராச்சார் சபாவின் தலைவர் ஏபிசிவி.சொக்கலிங்கம் அனுமதியுடன், தூத்துக்குடி ஏபிசி.வீரபாகு மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. ப்ராத்மிக் வகுப்பு முதல் ப்ரவீண் வகுப்பு வரை தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்காக இச்செமினார் நடத்தப்பட்டது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புகளில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயன் பெற்றனர். செமினார் வகுப்புகளுக்கான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி ஹிந்தி ப்ராச்சாரக்கர்களான எஸ்.டி.கார்மேகம், டி.தினகரன், ஏ.குருஸ் முத்து, ஆர்.பச்சைப்பாண்டியன், ஏ.ராமகிருஷ்ணன், டி.தினேஷ் பாபு மற்றும் ஒய்.பீட்டர் கோயில் ராஜ் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.


