ஆத்தூரில்
கிராம உதயம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு விழா
5ஆயிரம் துணிப்பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துக்கொண்டார்
ஆத்தூரில் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துக்கொண்டார். இந்நிகழ்சியில் 5ஆயிரம் மஞ்சள் துணிபை மற்றும் 5ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு விழா நடந்தது-. இந்நிகழ்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஆத்தூர் பஞ். தலைவர் கமால்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேனேஜர் வேல்முருகன் வரவேற்றார். விழாவின் போது பொதுமக்களுக்கு5ஆயிரம் மஞ்சள் பைகள், 5ஆயிரம் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இதில் கிராம உதயம் நிறுவனர் டாக்டர் சுந்தரேசன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆத்தூர் பஞ். துணைத்தலைவர் மகேஷ்வரிமுருகப்பெருமாள், ஆலோசனைக்குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங், சிறப்பு பொறுப்பாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். பகுதி பொறுப்பாளர் ஆரிய நாச்சியார் நன்றி கூறினார்.
படம் உள்ளது.
ஆத்தூரில் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துக்கொண்டு பெண்களுக்கு 5ஆயிரம் மஞ்சள் துணிபை மற்றும் 5ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்.


