தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தனர். அதன்பின் மாணவ, மாணவியர்களின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றது.
அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. நிறைவாக விழாவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துணை முதல்வர். ரா.ச.பிரியங்கா பொங்கல் வாழ்த்துக் கூறி நன்றி உரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புற செய்திருந்தனர்.


