தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 ந்தேதி வெள்ளத்தின் போது செக்காரக்குடி ஊராட்சி மிகவும் பாதிப்பு அடைந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது. மேலும் காலை முதலே விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ஐ. ராமலெட்சுமி ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
இன்று (12.12.2024) இரவு தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக செக்காரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செக்காரக்குடி ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது.
இருந்த போதும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
தங்கள் பகுதியில் ஏதாவது வெள்ள அபாயம் உள்ளிட்ட ஏதாவது பேரிடர், மழை அபாய அறிகுறிகள் தெரிந்தால் ஊராட்சிக்கு 9626552067 மற்றும் 6380271626 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
வெளியூர் சென்றவர்கள் இரவு 8 மணிக்கு முன்பு திரும்பி விடுவது நன்று
இரவு பயணம் பொட்டலூரணி வழியில் வரவும்
மகிளம்புரம் பாலம் பழுதடைந்து உள்ளது. கவனமாக வரவும்
என்று அந்த வேண்டுகோளில் அவர் கூறியிருந்தார்.


