திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு பிறந்த நாள் இன்று – டிசம்பர் 12, 1932 தமிழ்த் திரையுலகில் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு. 1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார்.
தாயில்லாமல் நான் இல்லை தானேஎவரும் பிறந்ததில்லை ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’’மயங்காத மனம் யாவும் மயங்கும்’இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’முதலான புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர் இவர்தான்
ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது. பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். 1973-74-ஆம் ஆண்டில் இவருக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திரையுலகில் இவர் எழுதிய பாடல்கள் குறைவு தான் என்றாலும் அந்த ஒவ்வொரு பாடல்களுமே மற்ற பாடலாசிரியர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும். என்றென்றும் நினைவில் காலத்தால் அழியாத பாடல்களாக இருக்கும் என்பது திண்ணம்.


