ரகுநாதா நான் உன்னில் எனையே காண்கிறேன் என்று புதுமைப்பித்தனால்
பாராட்டப்பட்டவர்.
தொ.மு.சி ரகுநாதனின் பாரதி- காலமும்
கருத்தும் என்னும் ஆய்வு நூலுக்கு
சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இலக்கியத்தை ஆழமாக நேசித்து அதனை உயர்நிலையில் வைத்து மதித்து
வருகிறார். வணிகநோக்கமோ, மலினப்
போக்கோ கிஞ்சித்தும் அவரைத் தொட்டதில்லை, அந்தரங்க சுத்தியுடன்
இலக்கியத்தை ஆள்பவர் தொ.மு.சி
( மல்லிகை’ – யாழ்ப்பாணம்)
தோழர் ஜீவானந்தம் தன் வீட்டுக்கு
வருகிறார் என்றால் தொ.மு.சி. ரகுநாதனுக்கு கைகால்கள் எல்லாம்
நடுங்குமாம். ஜீவா வீட்டிற்கு வந்ததும்
ரகுநாதா நல்ல காபி வேணும் வாங்கிட்டு
வா என்று சொல்லி தொ.மு.சி நூலகத்தை சூரையாடிவிடுவாராம்
ஜீவா. ( பொன்னீலன் -)
தொ. மு. சி தன் புத்தகங்களை எட்டயபுரத்துக்குக் கொண்டு போற அன்னிக்கு நான் பார்க்கிறேன்.
லாரியில் புத்தகங்களை ஏற்றியவுடன்
அது கிளம்புகிறது ரகுநாதன் சட்டை
போடாமல் பாலியஸ்டர் வேட்டியை மடித்துக் கட்டிக்கிட்டு ரெண்டு கையையும்
இடுப்புல வச்சி, அப்படியே பார்த்துகிட்டு
நின்னாரு அத மறக்கவே முடியாது.
( முனைவர் ராமச்சந்திரன் )
ரகுநாதன் நூலகம் அவர்வீட்டு மாடியிலே
இருந்தது, ரொம்ப ஒடுக்கமானபடி
செவரு பூராம் பலகையைப் பொருத்தி
அதுலயும் பழைய காலத்துல வருமே
கள்ளிப்பெட்டி பலகை – அந்தப் பலகை
பொருத்தி புத்தகத்தை அடுக்கி வச்சிருப்பாரு ( ஆ. சிவசுப்ரமணியம் )
தொ. மு. சி பெற்ற விருதுகள்
————————————————–
மாக்சிம் கார்க்கியின் ‘ தாய் ‘ நாவலைமொழிபெயர்த்தமைக்கு
” சோவியத் ஒன்றியம் ” நேரு விருது
(1965)
‘ கீதாஞ்சலி’ கவிதை நூலுக்காக
சோவியத் ஒன்றியம் நேரு விருது ( 1970)
திறனாய்வுக்காக தமிழன்னை பரிசு(1988)
கோவை லில்லி தெய்வ சிகாமணி நினைவு இலக்கிய பரிசு (1991)
ஈரோடு பாரதி சிந்தனை பேரவை
பாரதி விருது (2001)


