தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அவர்களின் உத்தரவு பேரில், உதவி திட்ட அலுவலர்கள் முனியசாமி, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி கருங்குளத்தில் வைத்து முதல் அடுக்கு பள்ளி குழு கூட்டம் (Tier – 1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லதா, ஊராட்சி மன்ற தலைவர் உதய சங்கர் ,உதவி ஆசிரியர்கள் சக்தி, பெஞ்சமின், பத்மா , சாந்தி ஆராச்சி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் புஷ்கலா, உறுப்பினர்கள் சண்முகசுந்தரி, CDPO சண்முகப்பிரியா , ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், பீபேகம், வட்டார இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ் ,வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் கொண்ட பள்ளி முதல் அடுக்கு குழுவினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பள்ளிக்கு தொடர்ச்சியாக வருகை புரியாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்ப்பது என முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் , மூன்று மாதங்களாக பள்ளிக்கு வராத மூன்று மாணவர்கள் வீட்டிற்க்கே நேரிடையாக பள்ளி முதற்கட்ட குழு (Tier – 1 )உறுப்பினர்கள் சென்று கள ஆய்வு செய்ததின் நிமித்தம் அம்மாவின் சுகவீனத்தின் (Heart Patient) நிமித்தம் பள்ளிக்கு வராத ஆகாஷ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் மகேந்திர மகாராஜா, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இசக்கி ராஜா ஆகிய மூவரும் இன்று மீண்டும் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டனர் .


