ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 – 6 சூன் 1997) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 – 1974 பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக “ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்” என்பது இவர் எழுதிய முதற்பாடல்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை


