1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.
1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
1815 – பிரித்தானியப் படைகள் கண்டியை அடைந்தன.
1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான கதிரவ மறைப்பு அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை மார்க்கோனி பெற்றார்.
1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.
1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.
1925 – ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.
1936 – சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.
1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.
1939 – இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.
1939 – பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும்,ஆங்கேரி,ஔருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.
1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.
1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.
1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
1979 – சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.
1979 – கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.
1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 – இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991 – உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.


